யான், நவம்பர்.22-
கெடா, யான், கம்போங் செடாகா தெங்கா என்ற இடத்தில் இன்று காலை 9.15 மணியளவில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு சிறார்கள் மரணமுற்றனர்.
சைக்களில் சென்ற 10 மற்றும் 11 வயது சிறார்களைக் கார் ஒன்று மோதியதில் கடும் காயங்களுக்கு ஆளான இரண்டு சிறார்களும் சம்பவ இடத்திலேயே மாண்டனர் என்று யான் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் ஹமிஸி அப்துல்லா தெரிவித்தார்.
சிறார்கள் சவாரி செய்த சைக்கிளைக் கார், பின்புறத்திலிருந்து மோதியதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த விபத்து 1987 ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.








