முதியவர் ஒருவர் செலுத்திய கார், விபத்துக்குள்ளானதில் அவர் கடும் காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று அதிகாலை 1.30 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 158 ஆவது கிலோ மீட்டரில் பினாங்கு, பத்துகாவானுக்கு அருகில் நிகழ்ந்தது.
63 வயது ஆர். தாமோதரன் என்பவரே இச்சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது. தாமோதரன் செலுத்திய புரோடுவா கெம்பாரா கார், டிரெய்லர் லோரியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக சுங்கை பாகாப் தீயணைப்பு, மீட்புப்படையின் உயர் அதிகாரி முகமது பைசல் கான் தெரிவித்தார்.
ஜாவி யிலிருந்து புக்கிட் தம்புனை நோக்கி, அந்த முதியவர் பயணித்துக் கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.








