Mar 23, 2026
Thisaigal NewsYouTube
நடப்பு சட்டத்தைப் பின்பற்றி கட்டப்படும்
தற்போதைய செய்திகள்

நடப்பு சட்டத்தைப் பின்பற்றி கட்டப்படும்

Share:

சிலாங்கூர் , ஜுன் 28-

சிலாங்கூர், பத்து ஆராங்கில் நிர்மாணிக்கப்படவிருக்கும் குப்பைகளை எரிக்கும் மாபெரும் எரியூட்டி மையம், நடப்பு விதிமுறைகளை பின்பற்றி, கட்டப்படுவதை எல்லா நிலைகளிலும் உறுதி செய்யப்படும் என்று சிலாங்கூர் மாநில அரசு உறுதி அளித்துள்ளது.

இந்த திட்டம் நிர்மாணிக்கப்படுவதற்கு முன்னதாக EIA எனப்படும் சுற்றுச்சூழல் தாக்கம் மீதான மதிப்பீட்டு ஆய்வறிக்கை கருத்தில் கொள்ளப்படும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சூயி லிமின் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநிலத்தில் அமையவிருக்கும் மிகப்பெரிய குப்பை எரிப்பு மையமான இந்த திட்டம், பத்து ஆராங்கில் நிர்மாணிக்கப்படுவதற்கு சுற்றுவட்டார மக்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வரும் வேளையில் ஆட்சிக்குழு உறுப்பினர் இந்த உத்தரவாதத்தை அளித்துள்ளார்.

Related News