Aug 12, 2026
Thisaigal NewsYouTube
விவசாயத் துறை கடுமையானச் சவாலை எதிர்கொள்கிறது
தற்போதைய செய்திகள்

விவசாயத் துறை கடுமையானச் சவாலை எதிர்கொள்கிறது

Share:

செர்டாங், மே.29-

விவசாயத் துறையில் உள்ள தொழிலாளர்கள் வயதானதால், மலேசியாவின் விவசாயத் துறை கடுமையானச் சவாலை எதிர்கொள்கிறது என்று துணைப் பிரதமர் பாஃடிலா யூசோப் தெரிவித்துள்ளார். விவசாயிகளில் கிட்டத்தட்ட பாதி பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால், இஃது உற்பத்தித் திறனையும் நாட்டின் உணவு உற்பத்தியைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனையும் பாதிக்கிறது என்றார்.

இத்துறையின் நிலைத்தன்மையை உறுதிச் செய்ய, மேலும் பல இளைஞர்களை விவசாயத் துறையில் ஈர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். திறமையான, போட்டித்தன்மை வாய்ந்த இளம் தலைமுறை இல்லாமல், இறக்குமதி சார்பு நிலையைக் குறைப்பதற்கும், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கும் உள்ள இலக்குகளை அடையக் கடினமாக இருக்கும் என அவர் மேலும் கூறினார்.

Related News