Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதா? ஹாடி அவாங் மீது நடவடிக்கை தேவை
தற்போதைய செய்திகள்

தேசிய ஒற்றுமையை சீர்குலைப்பதா? ஹாடி அவாங் மீது நடவடிக்கை தேவை

Share:

இந்த நாட்டில் உள்ள மலாய்க்காரர்களுக்கு பெரும் மிரட்டலாக இருப்பவர்கள் முஸ்லீம் அல்லாதவர்களே என்று கூறி இனத்துவேசத்தைத் தூண்டிவிட்டு, நாட்டின் தேசிய ஒற்றுமையைச் சீர்குலைத்து வரும் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பல்லின மக்களிடையே நிலவிவரும் ஒற்றுமைக்கு ஆணியடிக்கும் கைங்கரியத்தை புரிந்து வரும் ஹடி ஆவாங்கிற்கு எதிராக மலேசியர்கள், போலீசில் புகார் செய்ய வேண்டும் என்று ஜசெக தலைவர் லிம் குவான் எங் கேட்டுக்கொண்டுள்ளார்.

முஸ்லீம் அல்லாதவர்கள் மற்றும் மலாய்க்காரர் அல்லாதவர் பெரிய கொள்ளையர்கள் என்று கூறி, ஆகக்கடைசியாக ஹடி ஆவாங் தமது முகநூலில் கருத்து பதிவேற்றம் செய்திருப்பது, பிற இனத்தவரின் உணர்வையையும் பொறுமையையும் உரசி பார்க்கும் செயலாகும் என்று லிம் குவான் எங் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே போன்று ஹடி ஆவாங் செயல்பட்டதையும் லிம் குவான் எங் சுட்டிக்காட்டினார்.

இந்த நாட்டில் முஸ்லீம் அல்லாதவர்கள் அரசியலையும், பொருளாதாரத்தையும் சீரழித்து வருகின்றனர் என்பதுடன் லஞ்ச ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றனர் என்று அந்த மதவாதி பகிரங்கமாக குற்றஞ்சாட்டி இருப்பதையும் லிம் குவான் எங் மேற்கோள் காட்டினார்.

Related News