Dec 4, 2025
Thisaigal NewsYouTube
இந்திய சமூகம் ஒன்றுப்பட்டு இருந்தால் பொதுத் தேர்தல் முடிவை தீர்மானிக்க முடியும் – டத்தோஸ்ரீ ரமணன் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

இந்திய சமூகம் ஒன்றுப்பட்டு இருந்தால் பொதுத் தேர்தல் முடிவை தீர்மானிக்க முடியும் – டத்தோஸ்ரீ ரமணன் கூறுகிறார்

Share:

பிறை, ஜூலை.25-

இந்திய சமூகம் ஒற்றுமையாக, ஒன்றுப்பட்டு இருந்தால் அடுத்தப் பொதுத் தேர்தலில் தேர்தல் முடிவை நிர்ணயிக்கக்கூடிய ஒரு சமூகமாக விளங்கிட முடியும் என்று பிகேஆர் உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.

பாஸ் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அங்கு அவர்கள் மித்ரா நிதி, வழங்கப்படாதது குறித்து கேள்வி எழுப்பியதாக டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

கேள்வி எழுப்பிய பாஸ் கட்சி எம்.பி.க்களில் காப்பார் எம்.பி. டாக்டர் ஹலிமா அலியும் ஒருவர் ஆவார். பல இந்திய அரசு சாரா நிறுவனங்கள், சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்த கடிதங்களில் கையெழுத்திட்டன. ஆனால், அந்த நிறுவனங்கள், மித்ரா நிதிக்காக இன்னமும் காத்திருப்பதாக டாக்டர் ஹலிமா கூறியிருந்தார்.

டாக்டர் ஹலிமாவின் இந்த கோரிக்கையைக் கேட்டுத் தாம் அதிர்ச்சி அடைந்ததாக ரமணன் குறிப்பிட்டார். பாஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள் திடீரென்று மித்ராவைப் பற்றிப் பேசுகிறார்களா? என்று தாம் அதிர்ச்சி அடைந்ததாக ரமணன் குறிப்பிட்டார்.

இதற்கு முன்பு இப்படி நடந்ததைத் தாம் பார்த்ததில்லை என்று நேற்று பினாங்கு, பிறையில் இந்திய தொழில்முனைவோருக்கு கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வணிகக் கடன்களை வழங்கிய நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ரமணன் இதனைத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள், இந்தியர்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் தற்போது காட்டும் “திடீர் அக்கறை” குறித்து விவரித்த ரமணன், இதனைக் கண்டு இந்திய சமூகம் ஏமாந்து விடக்கூடாது என்று எச்சரித்தார்.

மலேசிய இந்தியர்களைப் பொறுத்தவரை நாட்டில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாத ஒரு சமூகம் அல்ல. அவர்கள் அரசியல் ரீதியாக கெட்டிக்காரர்கள் என்று ரமணன் கூறினார்.

தற்போது இந்தியர்களை பாஸ் கட்சி பக்கம் இழுப்பதற்காக அவர்களின் நல்வாழ்வுக்காக போராடுவதைப் போல நடிக்கிறீர்களா? என்று பாஸ் கட்சி எம்.பி.க்களை நோக்கி ரமணன் கேள்வி எழுப்பினார்.

இந்திய சமுதாயத்தைப் பற்றி பாஸ் தலைவர்கள் யோசிக்கக்கூட நேரமில்லாமல் ஓரங்கட்டியப் பின்னர் இப்போது நீலிக் கண்ணீர் வடிப்பதா? என்று ரமணன் வினவினார்.

எனினும் இந்தியர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், ஓர் ஒன்றுப்பட்ட சமூமாக விளங்கினால் அடுத்தப் பொதுத் தேர்தலில் தொகுதிகளில் கடும் போட்டி நிலவும் பட்சத்தில் தேர்தல் முடிவை நிர்ணயிக்கக்கூடிய சமூகமாக விளங்கி முடியும் என்று தொழில் முனைவர்கள், கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சரான ரமணன் தெரிவித்தார்.

Related News