Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பல்கலைக்கழகங்களுக்கு செல்வதை நிறுத்திவிட்டு பொருளாதார மீட்சியில் கவனம் செலுத்துங்கள்
தற்போதைய செய்திகள்

பல்கலைக்கழகங்களுக்கு செல்வதை நிறுத்திவிட்டு பொருளாதார மீட்சியில் கவனம் செலுத்துங்கள்

Share:

மாணவர்களைச் சந்திக்க அவர்களின் பல்கலைக்கழகங்கள் அல்லது கல்விக் கூடங்களுக்குச் செல்வதற்குப் பதிலாக, மக்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் அவலநிலையைக் கையாண்டு, அதன் மீட்சியில் கவனம் செலுத்துமாறு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை பெரிக்காத்தான் நேஷ்னல் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்டுக்கொண்டார்.

பல்கலைக்கழக மாணவர்களுடனான பிரதமர் அன்வாரின் சந்திப்பு, பல்கலைக்கழகத்தில் ஒரு வெளிப்படையான ஓர் அரசியல் பிரச்சாரத் திட்டமாக திகழ்வதாகவும், இது விரைவில் நடைபெறவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு இளைஞர்களின் வாக்குகளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் பாஸ் கட்சியின் பேசூட் நாடாளுமன்ற உறுப்பினர் சே முகமட் ஸுல்கிப்லி ஜுசோ குறிப்பிட்டார்.

தற்போது, நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையையும் செயல்திறனையும் மாணவர்களால் மதிப்பிட முடியும் என்பதால், பிரதமருடன் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட வேண்டிய அவசியமில்லை என்று நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில்சே முகமட் ஸுல்கிப்லி ஜுசோ இதனை தெரிவித்தார்.

Related News