Oct 18, 2026
Thisaigal NewsYouTube

கெடா கோரிக்கைக்கு பதில் அளிக்கத் தயார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கெடா கோரிக்கைக்கு பதில் அளிக்கத் தயார்

ஜார்ஜ் டவுன் , செப்டம்பர் 03-

சுத்திகரிக்கப்படாத தண்ணீருக்காக ஆண்டு 5 கோடி வெள்ளி இழப்பீடு கோரி, சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாக அறிவித்து இருக்கும் கெடா மாநில அரசுக்கு நீதிமன்றத்தில் பதில் அளிக்க பினாங்கு அரசு தயாராக இருப்பதாக அதன் முதலமைச்சர் சௌ கோன் இயோவ் அறிவித்துள்ளார்.

இந்த இழப்பீட்டு கோரிக்கை தொடர்பாக கெடா மாநில அரசாங்கத்திடமிருந்து தாங்கள் எந்தவொரு நோட்டீஸையும் இதுவரையில் பெறவில்லை என்று சௌ கோன் இயோவ் குறிப்பிட்டார்.

அப்படியொரு கோரிக்கையை கெடா அரசு முன்வைக்குமானால் சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பில் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப பினாங்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

பினாங்கு மாநில அரசாங்கத்திடமிருந்து சுத்திகரிக்கப்படாத தண்ணீர் கட்டணத்தைக் கோரி, அந்த மாநில அரசுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முஹம்மது சானுசி நோர் நேற்று அறிவித்து இருப்பது தொடர்பில் சௌ கோன் இயோவ் எதிர்வினையாற்றியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →