Aug 13, 2026
Thisaigal NewsYouTube
கெடாவை ஆக்கிரமிக்கப் போகும் வரட்சி - சூப்பர் எல் நினோவால் காட்டு தீ பரவும் அபாயம்
தற்போதைய செய்திகள்

கெடாவை ஆக்கிரமிக்கப் போகும் வரட்சி - சூப்பர் எல் நினோவால் காட்டு தீ பரவும் அபாயம்

Share:

இவ்வாண்டின் இறுதியில் சூப்பர் எல் நினோ உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், கிளாந்தான் மாநிலத்தில் கடும் வறட்சி மற்றும் திறந்தவெளி தீ விபத்துகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கிளாந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையான JBPM எச்சரித்துள்ளது.

இது குறித்து மாநில இயக்குநர் ஃபர்ஹான் சுஃப்யான் போர்ஹான் வெளியிட்டுள்ள தகவலில், இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 2,197 திறந்தவெளி தீ விபத்து தொடர்பான அவசர அழைப்புகள் பதிவாகியுள்ளன.

பெரும்பாலான தீ விபத்துகள் நிலம் சுத்தம் செய்தல் மற்றும் விவசாயத்திற்காக மேற்கொள்ளப்படும் திறந்தவெளி எரிப்புகளால் ஏற்படுவதாகவும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், தங்கம் தோண்டும் பணியில் ஈடுபடுவோர் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயரக்கூடியதால் உயிர்காப்பு அங்கி அணியுமாறும் அறிவுறுத்தினார்.

2025-ல் கிளாந்தானில் 25 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், இவ்வாண்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்

Related News

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி