ஈப்போ, டிசம்பர்.22-
இன்று பிற்பகல் ஒரு மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் டெங்கர் உட்பட மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தினால் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பிளஸ் நெடுஞ்சாலையின் ஈப்போவிலிருந்து சிம்பாங் பூலாய்க்குச் செல்லும் 281.5 ஆவது கிலோமீட்டரில் இந்த விபத்து நிகழ்ந்தது.
டெங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே சறுக்கி நின்றதால், அனைத்து வழித்தடங்களும் மூடப்பட்டன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாகனங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால், வாகனமோட்டிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








