Jul 10, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

Share:

மலேசியாவில் இவ்வாண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 9-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, நாடு முழுவதும் 42 ஆயிரத்து 848 டெங்கு பாதிப்பு மற்றும் 34 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 31 ஆயிரத்து 790 பாதிப்புகள் மற்றும் 19 உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகியிருந்தன.

இதன் அடிப்படையில், டெங்கு பாதிப்பு 34.8 சதவீதமும், உயிரிழப்புகள் 78.9 சதவீதமும் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த டெங்கு பாதிப்புகளில் 63.5 சதவீதம் சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு நடவடிக்கைகள், கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் சமூக விழிப்புணர்வு முயற்சிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related News

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

மலாக்காவில் பள்ளி நடவடிக்கையின் போது மயங்கி விழுந்த ஆறாம் படிவ மாணவர் மரணம்

மலாக்காவில் பள்ளி நடவடிக்கையின் போது மயங்கி விழுந்த ஆறாம் படிவ மாணவர் மரணம்