Aug 13, 2026
Thisaigal NewsYouTube
யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை
தற்போதைய செய்திகள்

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

Share:

3 யானைகள் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைத் துறையின் முன்னாள் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது, 53 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையிலான எந்தவொரு அடிப்படை ஆதாரமும் கிடைக்கவில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் அறிவித்துள்ளது.

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரிலுள்ள தென்னோஜி உயிரியல் பூங்காவிற்கு தாரா, அமோய் மற்றும் கிலாட் ஆகிய மூன்று ஆசிய யானைகள், கடந்த மார்ச் மாதம் மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்தக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இவ்விரு நிறுவனங்களுக்கும் இடையிலான 25 ஆண்டுகால உத்திசார் பாதுகாப்பு, கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் அல்லது அவருடன் தொடர்புடைய எந்தவொரு நிறுவனமும் சந்தேகத்திற்கிடமான வகையில் பணப் பரிமாற்றங்கள் எதையும் மேற்கொள்ளவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமான் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இவ்வழக்கு தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும், அத்துடன் நிதி மற்றும் வங்கிச் சார்ந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அப்துல் ஹலீம் அமான் தெரிவித்துள்ளார்.

Related News

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி