Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ஸ்ரீ அமானில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 9 வயது சிறுவன் உயிரிழந்தான்
தற்போதைய செய்திகள்

ஸ்ரீ அமானில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 9 வயது சிறுவன் உயிரிழந்தான்

Share:

கூச்சிங், ஸ்ரீ அமானில் உள்ள தாமான் செந்தோசா இண்டாவில், இன்று அதிகாலை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது வயது சிறுவன் உயிரிழந்தான்.

சம்பவ நடந்த போது, அவ்வீட்டில் 6 பேர் இருந்ததாக சரவாக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை சுமார் 3.02 மணியளவில் தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்தை அடைந்த வீரர்கள், வீட்டின் உள்ளே இருப்பவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

5 பேரை தீக்காயங்களுடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள், முற்றிலும் எரிந்து சாம்பலான வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, 9 வயது சிறுவன் அவ்வீட்டின் முதல் தளத்தில் எரிந்த நிலையில் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மீட்கப்பட்டவர்கள் ஸ்ரீ அமான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு