கிள்ளான், நவம்பர்.13-
கோலக்கிள்ளான், பண்டமாரான், கம்போங் பாப்பானில் வீடுகள் உடைக்கப்படுவதை ஆட்சேபித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களைக் கைது செய்தது சட்டவிரோதச் செயலாகும் என்று மலேசிய சோஷலிசக் கட்சியான பிஎஸ்எம் தெரிவித்துள்ளது.
குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் தொடர்ந்து குடியிருந்து வரும் பட்சத்தில் அந்த வீடுகளை மண்வாரி இயந்திரங்களைக் கொண்டு இடிக்கப்பட்டது சட்டத்திற்கு முரணானச் செயலாகும் என்று பிஎஸ்எம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
காலி செய்யப்பட்ட வீடுகளை மட்டுமே உடைக்க வேண்டும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி உத்தரவிட்டு இருந்த நிலையில் இன்னமும் குடியிருந்தவர்களின் வீடுகளையும் சேர்த்து உடைக்கப்பட்டு இருப்பது மந்திரி பெசாரின் உத்தரவுக்கு முரண்பட்ட செயலாகும் என்று பிஎஸ்எம் தெரிவித்துள்ளது.








