Jan 20, 2026
Thisaigal NewsYouTube
குற்றத்தன்மை எதுவும் இல்லை
தற்போதைய செய்திகள்

குற்றத்தன்மை எதுவும் இல்லை

Share:

50 ஆண்டுக்கால வரலாற்றைக் கொண்ட பெட்டாலிங் ஜெயா, ஜாலான் காசிங்கில் உள்ள தொழிலாளர் சேமநிதி வாரியமான இபிஎப்பிற்கு சொந்தமான கட்டடம் தீப்பற்றிக்கொண்டதில் எந்தவொரு குற்றத் தன்மையிலான நாச வேலை இல்லை என்று போலீஸ் துறை தெரிவித்துள்ளது.

6 மாடிகளைக் கொண்ட அந்த பழங்கால இபிஎப் கட்டடத்தில், நேற்று காலையில் ஏற்பட்ட தீச் சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட பூர்வாங்க புலன் விசாரணையில், குற்றத் தன்மை நிகழ்ந்ததற்கான எந்தவொரு அறிகுறியும் இல்லை என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஃபக்ருடின் அப்துல் ஹமிட் குறிப்பிட்டார்.

Related News