Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் ஐவர் படுகாயம்

Share:

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 436.8 ஆவது கிலோ மீட்டரில் உலு சிலாங்கூர் அருகில் இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதர ஐவர் படுகாயம் அடைந்தனர்.

இவ்விவத்து இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நிகழ்ந்தது. இதில் சின் கியான் ஹோங் என்ற 33 வயதுடைய நபர் உயிரிழந்தார். காயம் அடைந்த .22 க்கும் 57 க்கும் இடைப்பட்ட வயதுடைய இதர ஐவரில் நால்வர் அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர் என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் தெரிவித்தார்.

காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் சிக்கி மரணம் அடைந்தவரின் உடலை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப்படையினர் பிரத்தியேக உபகரணங்களை பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News