Sep 26, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய மக்கள் தொகை 34.4 மில்லியனாக உயர்வு: இந்தியர்களின் எண்ணிக்கை 6.5 விழுக்காடாக  நீடிப்பு
தற்போதைய செய்திகள்

மலேசிய மக்கள் தொகை 34.4 மில்லியனாக உயர்வு: இந்தியர்களின் எண்ணிக்கை 6.5 விழுக்காடாக நீடிப்பு

Share:

மலேசிய புள்ளியியல் துறை இன்று வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டின் முதலாம்காலாண்டு அறிக்கையின்படி, நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இந்தியர்களின் விழுக்காட்டில் எந்தவொரு மாற்றமின்றி 6.5 விழுக்காடாகவே நீடிக்கிறது.

மலேசியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை, கடந்த ஆண்டை விட 0.5 விழுக்காடு மெதுவான வளர்ச்சியைப் பதிவுசெய்து, தற்போது 34.4 மில்லியனை எட்டியுள்ளது.

இதில் இன வாரியான கணக்கெடுப்பின்படி, மலாய்க்காரர்களின் எண்ணிக்கை 58.3 விழுக்காடாக அதிகரித்துள்ள வேளையில், சீனர்களின் எண்ணிக்கை 22.1 விழுக்காடாக ஆகக் குறைந்துள்ளது.

பிற பூமிபுத்ராக்கள் 12.3 விழுக்காடாக மாறாமல் உள்ளனர். நாட்டில் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

Related News