Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மதுபானம் பரிமாறப்பட்ட விவகாரம்: தொடர்ந்து சர்ச்சையாக்குவதா? அமைச்சர் வருத்தம்
தற்போதைய செய்திகள்

மதுபானம் பரிமாறப்பட்ட விவகாரம்: தொடர்ந்து சர்ச்சையாக்குவதா? அமைச்சர் வருத்தம்

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.09-

டூரிசம் மலேசியா முகாமையின் குளோபல் டிரவல் நிகழ்ச்சியில் மதுபானம் பரிமாற்றப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து சர்ச்சையாக்கி வருவது குறித்து சுற்றலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங் தனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டார்.

வெளிநாட்டு சுற்றுலாத் துறைச் சார்ந்தவர்களுடன் இரவு விருந்தில் மது பரிமாறப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவ்விவகாரத்தில் இன்னமும் குழப்பமும், தவறான புரிதலும் ஏற்பட்டு வருவது வருத்ததை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தம்மைப் பொறுத்தவரையில் இவ்விவகாரத்தில் மக்கள் கொண்டுள்ள மாறுபட்ட கருத்துகளை மதிப்பதாகவும், ஆனால், தாம் தெளிவுப்படுத்தக்கூடிய ஒரே விஷயம் என்னவென்றால், அது அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சி அல்ல என்பதை வலியுறுத்த விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய எந்தவொரு குழப்பத்திற்கும், தவறான புரிதலுக்கும் அமைச்சர் என்ற முறையில் தாமும், சுற்றுலா அமைச்சும் தார்மீகப் பொறுப்பேற்று வருத்தம் தெரிவித்து கொள்வதாக நாடாளுமன்ற மக்களவையில் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் தெரிவித்தார்.

Related News