பெர்லிஸ் தடுப்பு முகாமில் கைதி ஒருவர் மூச்சுத் திணறலுக்கு ஆளாகி மரணமுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 42 வயதுடைய அந்த கைதி நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் மதிய உணவுக்கு பிறகு மூச்சுத் திணறலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. அந்த கைதி, லங்காவி தடுப்பு முகாமிலிருந்து பெர்லிஸ் தடுப்பு முகாமிற்கு கொண்டு வரப்பட்டப் பின்னர் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
25 நிமிடத்திற்கு பிறகு அந்த கைதி கங்கார், துவான்கு ஃபௌஸியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் மரணமுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


