Nov 12, 2026
Thisaigal NewsYouTube

"உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் சுட்டுத் தள்ளுங்கள்" - அதிகாரிகளுக்கு கோலாலம்பூர் போலீஸ் உத்தரவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
"உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் சுட்டுத் தள்ளுங்கள்" - அதிகாரிகளுக்கு கோலாலம்பூர் போலீஸ் உத்தரவு

கெப்போங் பகுதியில் பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் அரிவாள் தாக்குதலில் வலது கையை இழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது தயக்கமின்றி துப்பாக்கிச் சூடு நடத்துமாறு கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் வெளியிட்டுள்ள தகவலில், முன்னிலையில் நின்று பணியாற்றும் போலீஸ்காரர்களுக்கு இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழ்வதைத் தாம் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றவாளிகளை எதிர்கொள்ளும் அதிகாரிகள் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், சம்பவ இடத்தின் சூழலை மதிப்பிட்டு, துப்பாக்கியைத் தயாராக வைத்துக் கொண்டு, இலக்கை அடையாளம் காண வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஏதேனும் தடையோ சந்தேகமோ ஏற்பட்டாலும், தங்களுக்கு அச்சுறுத்தல் அல்லது ஆபத்து இருப்பதாக உணர்ந்தாலும் தயங்காமல் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டும் என்றும், அதற்காகக் காத்திருக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →