கோலாலம்பூர், ஆகஸ்ட்.25-
நகராமல் கைவிடப்பட்ட நிலையில் கிடக்கும் பழைய வாகனத்தைப் போதைப்பொருள் கிடங்காகப் பயன்படுத்திய வந்த கும்பலின் தந்திரத்தைப் போலீசார் வெற்றிகரமாக முறியடித்தனர்.
கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டது மூலம் சம்பந்தப்பட்ட கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போாலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் போலீசார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாக சிலாங்கூர் செராஸ், தாமான் செகார் வீடமைப்புப் பகுதியில் டொயோட்டா வியோஸ் ரகக் காரில் சோதனையிட்ட போது 10 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








