Oct 18, 2026
Thisaigal NewsYouTube

குற்றச்சாட்டை மறுத்தார் தந்தை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குற்றச்சாட்டை மறுத்தார் தந்தை

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 07

கோலாலம்பூரில் உள்ள உயர் நிலைப்பள்ளி ஒன்றில் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட தமது மகள், பகடிவதைக்கு ஆளாகியதாக கூறப்படும் குற்றச்சாட்டை அந்தப் பெண்ணின் தந்தை மறுத்துள்ளார்.

அதேவேளையில் தாம் பகடிவதையினால் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த காணொளியில் பேசுகின்ற பெண் தனது மகள் அல்ல என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மகளின் மறைவினால் மிகவும் துன்பத்தில் இருக்கும் தங்கள் குடும்ப உறுப்பின்களுக்கு மேலும் மன வலியை கொடுப்பதற்கு இது போன்ற வீடியோ காணொளிகளை வெளியிட வேண்டாம் என்றும் மிக உருக்கமான வேண்டுகோளை அந்த தந்தை விடுத்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →