May 22, 2026
Thisaigal NewsYouTube
Canberra சென்றடைந்தார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
தற்போதைய செய்திகள்

Canberra சென்றடைந்தார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்

Share:

கென்பெரா, மார்ச் 7 -

ஆஸ்திரேலியாவிற்கான தமது 4 நாள் அதிகாரத்துவப் பயணத்தில் மெல்போர்ன் வருகையை முடித்துக்கொண்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று கென்பெரா சென்றடைந்தார்.

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பான்ஸ் அழைப்பின் பேரில் ஆஸ்திரேலியாவிற்கு தமது முதலாவது அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் அன்வார், தமது துணைவியார் டத்துக் ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் லுடன் மலேசிய நேரப்படி இன்று காலை 9.20 மணியளவில் கென்பெரா விற்கான தமது ஒரு நாள் வருகையை மேற்கொண்டுள்ளார்.

நிதி அமைச்சருமான அன்வார், கென்பெராவில் உள்ள ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழத்தில் சொற்பொழிவு நிகழ்​த்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, கென்பெரா அரசாங்க இல்லத்தில் ஆ​ஸ்திரேலிய காமன்வெல்த் தலைமை கவர்னர் டெவிட் ஹுர்லீ யை பிரதமர் அன்வார் சந்தித்தார்.

மலேசியாவின் முக்கிய வர்ததக சகாவான ஆஸ்தி​ரேலியாவிற்கு பிரதமர் அன்வார் மேற்கொண்டுள்ள இந்த 4 நாள் அதிகாரத்துவ வருகையின் ​மூலம் வர்த்தகம்,முத​லீடு,கல்வி, தற்காப்பு, சைபர் பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்பம் ஆகியத் துறைகளில் இரு நாடுகளும் கூட்டு ஒத்துழைப்பு கொள்வது தொடர்பில் இணக்கம் கண்டுள்ளன.

Related News