Jan 19, 2026
Thisaigal NewsYouTube
ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் வெளிநாடு செல்ல தடை
தற்போதைய செய்திகள்

ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் வெளிநாடு செல்ல தடை

Share:

நிலுவையில் உள்ள தங்களின் வருமானவரியைச் செலுத்த தவறியுள்ள ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் வெளிநாட்டிற்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வருமான வரி வாரியம் அறிவித்துள்ளது. வருமான வரியாக மொத்தம் 730 கோடி வெள்ளி செலுத்தப்படாமல், இவர்கள் பாக்கி வைத்துள்ளதாக அந்த வாரியத்தின் பேச்சாளர்ச்ரஞ்ஜிட் கவுர் தெரிவித்தார்.

100 வெள்ளிக்கும் குறைவாக வருமான வரி பாக்கி இருந்தாலும் அவர்களும் வெளிநாட்டிற்கு செல்ல தடை விதிக்கப்படுவர். சம்பந்தப்பட்டவர்கள் விமான நிலையத்திலேயே குடிநுழைவுத் துறையினாரால் தடுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்படுவர் என்று ரஞ்சிட் கவுர் விளக்கினார்.

வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கின்ற ஒவ்வொரு மலேசியரும் பயணத்திற்கு முன்னதாக வருமான வரி தொடர்பான தங்களின் தார்மீக கடப்பாட்டை நிறைவு செய்ய வேண்டும். அதன் பின்னரே அவர்களின் வெளிநாட்டுப் பயணத்திற்கு அனுமதி வழங்கப்படும் அந்த உயர் அதிகாரி தெளிவுபடுத்தினார்.

Related News