பாரிசான் நேஷனலின் உறுப்புக் கட்சியான மசீச , அமைச்சரவைக்கு வெளியே இருப்பதுதான் மரியாதை என்று அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் தி லியான் கெர் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சரவையில் மாற்றம் நடைபெற இருப்பதாக வெளியானத் தகவலைத் தொடர்ந்து மசீச அமைச்சரவைக்கு வெளியே இருந்தவாறு நடப்பு நிலவரங்களைக் கண்காணிக்கும் ஒரு கட்சியாக விளங்கிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மசீச தற்போது பிரதமர் அன்வாரின் நிர்வாகத்தை ஆதரித்தாலும் நல்லது கெட்டதை சுட்டிக் காட்டுவதற்கு அக்கட்சி அமைச்சரவைக்கு வெளியே இருப்பதுதான் ஏற்புடையது என்று தி லியான் கெர் தெளிவு படுத்தி உள்ளார்.








