Sep 28, 2026
Thisaigal NewsYouTube
ரோஸ்மா சொத்துகளை முடக்குவது குறித்து ஜனவரியில் தீர்ப்பு
தற்போதைய செய்திகள்

ரோஸ்மா சொத்துகளை முடக்குவது குறித்து ஜனவரியில் தீர்ப்பு

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரஸாக்கின் மனைவி டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோரின் சொத்துகளை முடக்கக் கோரி 1எம்டிபி உள்ளிட்ட 11 நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பில், அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி உயர் நீதிமன்றம் முடிவு செய்யவுள்ளது.

ரோஸ்மாவுக்கு எதிரான 346 மில்லியன் அமெரிக்க டாலர் வழக்கு முடிவடையும் வரை, அவரது சொத்துகளை விற்பனை செய்வதையோ மாற்றுவதையோ தடுக்கும் மரேவா இன்ஞங்ஷன் (Mareva injunction) எனப்படும் சொத்து முடக்க உத்தரவை பிறப்பிக்குமாறு 1எம்டிபி உள்ளிட்ட நிறுவனங்கள் கோரியுள்ளன.

இன்று நடைபெற்ற வழக்கு நிர்வாகத்தின்போது, நீதித்துறை ஆணையர் அடாம்@எட்வர்ட் அப்துல்லா, ஜனவரி 7ஆம் தேதி மனுவை விசாரித்து முடிவு செய்யத் தேதி நிர்ணயித்தார்.

2024ஆம் ஆண்டு மே மாதம் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் 1எம்டிபி நிதியைக் கொண்டு ஆடம்பரப் பொருட்கள் வாங்கப்பட்டதாகவும், அதற்காக 346.01 மில்லியன் அமெரிக்க டாலரை ரோஸ்மாவிடமிருந்து பெற்றுத்தர வேண்டும் என்றும் 1எம்டிபி உள்ளிட்ட நிறுவனங்கள் கோரியுள்ளன.

Related News