Dec 26, 2025
Thisaigal NewsYouTube
நஜீப்பிற்கு கூடியபட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

நஜீப்பிற்கு கூடியபட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும்

Share:

புத்ராஜெயா, டிசம்பர்.26-

1எம்டிபி வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு இருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு கூடியபட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று பிராசிகியூஷன் தரப்பு இன்று நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

அதே வேளையில் நஜீப்பிற்கு 11.39 பில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அஹ்மாட் அக்ராம் காரிப் கேட்டுக் கொண்டார்.

அரசாங்கத்தின் பிரதான முதலீட்டு நிறுவனமான 1எம்டிபி நிறுவனத்திற்குச் சொந்தமான பணத்தை தனது விருப்பம் போல் பயன்படுத்துவற்கு தாம் வகித்து வந்த பிரதமர் பதவி மற்றும் நிதி அமைச்சர் பதவியை நஜீப் ஒரு கேடயமாகப் பயன்படுத்தியுள்ளார்.

எஸ் ஆர்சி இண்டன்நெஷனல் வழக்கில் தற்போது 6 ஆண்டு கால சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் நஜீப், தனது தண்டனை காலத்தை முழுமையாகப் பூர்த்தி செய்த பின்னர் அவருக்கான இவ்வழக்கின் தண்டனைக் காலம் 2028 ஆண்டிலிருந்து தொடங்கப்பட்டு, 2040 ஆண்டில் அதாவது நஜீப்பிற்கு 95 ஆவது வயதில் தண்டனை நிறைவு பெற வேண்டும் என்று பிராசிகியூஷன் பரிந்துரை செய்துள்ளது.

Related News