Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மூன்றாம் படிவ மாணவி பள்ளி வகுப்பறையில் பாலியல் பலாத்காரம்: 4 மாணவர்களில் இருவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மூன்றாம் படிவ மாணவி பள்ளி வகுப்பறையில் பாலியல் பலாத்காரம்: 4 மாணவர்களில் இருவர் மீது குற்றச்சாட்டு

Share:

மலாக்கா, அக்டோபர்.16-

மலாக்கா, அலோர் காஜாவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் வகுப்பறையில் மூன்றாம் படிவ மாணவியை ஒரு கும்பலாக பாலியல் பலாத்காரம் புரிந்ததாகக் கூறப்படும் நான்கு மாணவர்களில் இருவர் அலோர் காஜா சிறார் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

இந்த வருடம் எஸ்பிஎம் தேர்வு எழுதவிருக்கும் அந்த இரண்டு மாணவர்களுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன. ஒரு கும்பலாகக் கூட்டுப் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டது, இயற்கைக்கு மாறாக பாலியல் வன்கொடுமை புரிந்தது மற்றும் உடல் ரீதியான பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது என மூன்று குற்றச்சாட்டுகள் அந்த இரண்டு மாணவர்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டன.

இரண்டு மாணவர்களில் ஒருவர் குற்றத்தை ஒப்புக் கொண்ட வேளையில் மற்றொரு மாணவர், தனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் கூடியபட்சம் 15 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 375 B பிரிவின் கீழ் அந்த இரண்டு மாணவர்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி பிறப்கல 2.30 மணியளவில் அலோர் காஜாவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் வகுப்பறையில் இந்த பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

நான்கு மாணவர்களில் ஒருவர், அந்த பாலியல் வன்கொடுமையைத் தனது கைப்பேசியில் பதிவு செய்து, சக மாணவர்களுக்கு பகிர்ந்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் அம்பலமானது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியைப் பள்ளியின் ஆசிரியர் விசாரணை செய்ததைத் தொடர்ந்து, இது குறித்து பள்ளி நிர்வாகம், மாணவியின் தாயாருக்குத் தகவல் அளித்தது.

பின்னர் இது குறித்து மாணவியின் தாயார் போலீசில் புகார் செய்ததில் ஐந்தாம் படிவ மாணவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ள மாணவன் 7 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related News