Dec 2, 2025
Thisaigal NewsYouTube
USM துணை வேந்தருடன் செனட்டர் சிவராஜ் சந்திப்பு
தற்போதைய செய்திகள்

USM துணை வேந்தருடன் செனட்டர் சிவராஜ் சந்திப்பு

Share:

எஸ்.தி.பி.எம். அல்லது அதற்கு ஈடான கல்வித் தகுதியை முடித்துக்கொண்டு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகமான USM மில் கால்பதிப்பதற்கு இந்திய மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் தொடர்பில் எழுந்துள்ள சில விவகாரங்கள் குறித்து மேலவை உறுப்பினர் டத்தோ சி. சிவராஜ், அப்பல்லைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் அப்துல் ரஹ்மான் முஹமட்டுடன் இன்று ஒரு கலந்துரையாடலை நடத்தினார்.

இந்திய மாணவர்கள் எஸ்.பி.எம். கல்வியை முடித்தப்பின்னர் உயர்க்கல்வியைத் தொடர்வதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. மாறாக, பொருளாதார தன்மையிலான வேலை வாய்ப்புகளில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்குகின்றனர். SPM முடித்த மாணவர்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காட்டினர் உயர்கல்வியைத் தொடர்வதைக் காட்டிலும் இதுபோன்ற வேலை வாய்ப்புகளில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அந்த வகையில் USM மினால் வழங்கக்கூடிய பயிற்சிகளில் 60 விழுக்காடு அறிவியல் பாடத்தை அடிப்படையாக கொண்டவை என்பதால் அவற்றில் இந்திய மாணவர்களை கவர்வதற்கான வழிகள் குறித்து பேராசிரியர் டத்தோ டாக்டர் அப்துல் ரஹ்மானுடன் டத்தோ சிவராஜ் கலந்து ஆலோசித்தார்.

அதேவேளையில் இவ்விவகாரத்தில் இந்திய மாணவர்களுக்கு உதவுவதற்கான தமது கடப்பாட்டை பேராசிரியர் டத்தோ டாக்டர் அப்துல் ரஹ்மான் இச்சந்திப்பின் போது வெளிப்படுத்தியதாக டத்தோ சிவராஜ் குறிப்பிட்டார்.

தவிர பொதுச் சேவை மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் சமூகவியல் புத்தாக்கம் வாயிலாக இந்தியர்களின் சமூகவியல் பொருளாதார உருமாற்றத்திற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு USM தனது பங்களிப்பை வழங்கும் என்று டத்தோ டாக்டர் அப்துல் ரஹ்மா உறுதி அளித்துள்ளதாக டத்தோ சிவராஜ் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது USM மின் முதிர் நிலை துணை பதிவாளர் பேராசிரியர் டாக்டர் சிவமுருகன் பாண்டியன் மற்றும் இதர உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

Related News

USM துணை வேந்தருடன் செனட்டர் சிவராஜ் சந்திப்பு | Thisaigal News