May 24, 2026
Thisaigal NewsYouTube
வளர்ப்பு மகள் பாலியல் பலாத்காரம், ஆடவருக்கு சிறை
தற்போதைய செய்திகள்

வளர்ப்பு மகள் பாலியல் பலாத்காரம், ஆடவருக்கு சிறை

Share:

கோலாலம்பூர், செப்டம்பர் 26-

தனது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக உணவக சமையல்காரர் ஒருவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமனறம் இன்று 5 ஆண்டு சிறை மற்றும் 2 பிரம்படித் தண்டனை விதித்தது.

37 வயதுடைய அந்த சமையல்காரர் , கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோலாலம்பூர், கெப்போங்கில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் தனது 11 வயது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

தண்டனை காலத்திற்கு பிறகு அந்த நபர் ஓராண்டு காலம் நல்லுரை பயிற்சியில் உட்படுத்தப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News