Oct 16, 2026
Thisaigal NewsYouTube

பினாங்கு தீவில் வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்படவிருக்கிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பினாங்கு தீவில் வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்படவிருக்கிறது

பினாங்க, நவ. 26-


பினாங்கு தீவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வாகன நிறுத்தம் கட்டணம் 50 விழுக்காடு உயர்த்தப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இடத்தின் தன்மைக்கு ஏற்ப இந்த கட்டண உயர்வு அமைந்திருக்கும்.

அரை மணி நேரத்திற்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த 40 காசு கட்டணம், 60 காசாக உயர்த்தப்படவிருக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த 80 காசு கட்டணம் ஒரு ரிங்கிட் 20 காசாக உயர்த்தப்படவிருக்கிறது.

நாள் ஒன்றுக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த 6 ரிங்கிட் கட்டணம், 9 ரிங்கிட்டாக உயர்த்தப்படவிருக்கிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →