Oct 21, 2026
Thisaigal NewsYouTube

நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து திரைப்படத் துறையை மேம்படுத்த மலேசியா முயற்சி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து திரைப்படத் துறையை மேம்படுத்த மலேசியா முயற்சி

திரைப்படத் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கான மையமாக மலேசியாவை உருவாக்க, நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை மலேசியா ஆராய்ந்து வருகிறது.

தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்சீல், இந்தோனேசியா, ஜகார்த்தாவில் இன்று நெட்ஃபிளிக்ஸ் பிரதிநிதிகளுடன் நடத்திய சந்திப்புக்குப் பிறகு இதனைத் தெரிவித்தார். திரைப்படத் தொகுப்பு, வண்ணத் திருத்தம் உள்ளிட்ட தொழில்நுட்பப் பணிகளில் மலேசியர்களுக்குப் பயிற்சி அளிப்பதும், உள்ளூர் திறமையாளர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதும் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றன.

மலேசியத் திரைப்படங்கள், அனிமேஷன் படைப்புகள் அனைத்துலக சந்தையைச் சென்றடைய நெட்ஃபிளிக்ஸின் தேர்வு நடைமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நெட்ஃபிளிக்ஸ் பிரதிநிதிகள் கோலாலம்பூரில் உள்ள ஃபினாஸ் (FINAS) புதிய அலுவலகத்தைப் பார்வையிடவும், மலேசியாவில் பிராந்தியப் பயிற்சித் திட்டங்களை நடத்துவது குறித்துப் பரிசீலிக்கவும் உள்ளனர்.

 

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →