விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடும் வாகனமோட்டிகளுக்கு எதிராகக் கடுமையான தண்டனைகளை விதிப்பது குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
சாலை விபத்துகளில் உயிரிழப்புகளைத் தடுக்கவும், விபத்துகளுக்கான ஆதாரங்களைத் திரட்டவும் வாகனங்களில் டேஷ்கேம் பொருத்துவதை அரசு ஊக்குவித்து வருவதாக அவர் கூறினார்.
கடந்த ஆண்டு மலேசியாவில் பதிவான 6,581 சாலை விபத்து உயிரிழப்புகளில், 4,452 பேர் மோட்டார் சைக்கிளோட்டிகளும் பின்னால் அமர்ந்து பயணித்தவர்களும் ஆவர்.
இதற்கிடையே, அதிவேகம், வணிக வாகனங்களில் அதிகப் பாரம் ஏற்றுதல், மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுவதாகவும் அந்தோணி லோக் தெரிவித்தார்.








