Oct 21, 2026
Thisaigal NewsYouTube

69,600 ரிங்கிட் லஞ்சம்: தெமர்லோ முன்னாள் போலீஸ் தலைவர் 8 மாதம் சிறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
69,600 ரிங்கிட் லஞ்சம்: தெமர்லோ முன்னாள் போலீஸ் தலைவர் 8 மாதம் சிறை

69,600 ரிங்கிட் லஞ்சம் பெற்ற 46 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பகாங், தெமர்லோ முன்னாள் மாவட்ட போலீஸ் தலைவர் முஹமட் அஸார் முஹமட் யுசோஃப்புக்கு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

56 வயதான அவருக்கு, குவாந்தான் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஸஸ்லீனா சஃபி இன்று தண்டனை விதித்தார். 2019 முதல் 2023 வரை 100 முதல் 5,600 ரிங்கிட் வரையிலான தொகைகளை நால்வரிடமிருந்து பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

46 குற்றச்சாட்டுகளுக்கும் தலா 8 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், அனைத்துத் தண்டனைகளும் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றவியல் சட்டத்தின் 165-ஆவது பிரிவின்கீழ் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார்.

இணையப் பணப் பரிமாற்றங்கள் மூலம் இந்தத் தொகைகள் வழங்கப்பட்டதாகவும், பல்வேறு குற்றங்களுக்காக அந்த நால்வருக்கும் போலீஸ் துறையின் நடவடிக்கைகளிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்கான தூண்டுதலாகப் பணம் பெறப்பட்டதாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது. 2023 செப்டம்பர் 7-ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டபோது முஹமட் அஸார் முஹமட் யுசோஃப் குற்றத்தை மறுத்து விசாரணை கோரியிருந்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →