Oct 21, 2026
Thisaigal NewsYouTube

வெளிநாட்டினருக்கு மைகார்டு வழங்கினால் 3 ஆண்டுகள் சிறை, 20,000 ரிங்கிட் அபராதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெளிநாட்டினருக்கு மைகார்டு வழங்கினால் 3 ஆண்டுகள் சிறை, 20,000 ரிங்கிட் அபராதம்

வெளிநாட்டினருக்கு தங்களது மைகார்டு அடையாள அட்டையை வாடகைக்கு வழங்கும் அல்லது ஒப்படைக்கும் மலேசியர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 20,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று உள்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஷாம்சூல் அனுவார் நசாரா தெரிவித்துள்ளார்.

தேசியப் பதிவுத்துறையான ஜேபிஎன்னின் 1990 ஆம் ஆண்டு விதிமுறைகள் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அவர் இன்று மக்களவையில் தெரிவித்தார். வெளிநாட்டினர் மலேசியக் குடிமக்களின் அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதுடன், இத்தகைய முறைகேடுகளை முன்கூட்டியே கண்டறிவதும் அமலாக்க நடவடிக்கைகளின் நோக்கம் என்றார்.

உள்ளூர் மக்கள் சிலர் தங்களது மைகார்டுகளை வெறும் 100 ரிங்கிட் வாடகைக்கு வழங்கி, வெளிநாட்டினர் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்கு உதவுவதாக பத்தாங் லுபார் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முஹமட் ஷாஃபிஸான் கெப்லி எழுப்பிய துணைக் கேள்விக்குப் பதிலளித்தபோது டாக்டர் ஷாம்சூல் இதனைத் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →