Oct 21, 2026
Thisaigal NewsYouTube

ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் ஷுஹைலி வழக்கம்போல் பணியாற்றுவார்: வழக்கறிஞர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் ஷுஹைலி வழக்கம்போல் பணியாற்றுவார்: வழக்கறிஞர்

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முஹமட் ஷுஹைலி முஹமட் ஸையினுக்கு எதிராக அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை வழக்கம்போல் தனது பணிகளைத் தொடர்வார் என்று அவரது வழக்கறிஞர் டத்தோ ரோசால் அஸிமின் அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

இன்று சிப்பாங் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஷுஹைலியின் பதவி தொடர்பான எந்தவொரு முடிவும் உள்துறை அமைச்சு அல்லது பொதுச் சேவைத் துறையின் நிர்வாக நடைமுறைகளுக்கு உட்பட்டது என்றார்.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 1,500 ரிங்கிட் பிணைத்தொகை செலுத்தியதைத் தொடர்ந்து, இவ்வழக்கு நவம்பர் 25-ஆம் தேதி சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் குறிப்பிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுவதால், வழக்கு குறித்து யாரும் ஊகங்களை வெளியிட வேண்டாம் என்றும், குற்றம் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி என்ற சட்டக் கோட்பாட்டை மதிக்க வேண்டும் என்றும் டத்தோ ரோசால் அஸிமின் அஹ்மாட் கேட்டுக் கொண்டார்.

முஹமட் ஷுஹைலி தற்போது நலமாக இருப்பதாகவும், சட்ட நடைமுறைகளை எதிர்கொள்ள நேர்மறையான மனநிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →