கோலாலம்பூர், செப்டம்பர்.18-
பேரங்காடி ஒன்றின் முன்னாள் காசாளர் ஒருவர் தனக்கு எதிரான நம்பிக்கை மோசடி, பண மோசடி உள்ளிட்ட 14 குற்றச்சாட்டுகளை மறுத்து அமர்வு நீதிமன்றத்தில் இன்று மேல் விசாரணை கோரியுள்ளார்.
28 வயதான நூர் அதிகா அஷிரா முகமட் ஃபௌஸி, அவர் பணியாற்றிய பேரங்காடிக்குச் சொந்தமான Touch ‘n Go eWallet சேவையைத் தவறாகப் பயன்படுத்தி, தனது கணக்கிற்கும், தனது உறவினர்களில் கணக்கிற்கும் சுமார் 5 லட்சம் ரிங்கிட்டிற்கு மேலாக அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஜனவரி 1-ஆம் தேதி முதல் 2024 ஜுலை 9-ஆம் தேதி வரையில், ஏயோன் டேசா பார்க்சிட்டியில் அவர் இக்குற்றத்தைப் புரிந்தார் என நம்பப்படுகின்றது.
அதே வேளையில், கடந்த 2023 ஜனவரி 7-ம் தேதி முதல் ஜூலை 9-ம் தேதி வரையில் பேரங்காடியின் Touch ‘n Go-வைப் பயன்படுத்தி தனது சொந்தக் கணக்கிற்கு 98,000 ரிங்கிட் வரையில், பணப் பரிமாற்றம் செய்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.








