Nov 4, 2025
Thisaigal NewsYouTube
நான்காவது சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

நான்காவது சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டார்

Share:

செர்டாங், நவம்பர்.04-

சிலாங்கூர், ஶ்ரீ கெம்பாங்கான் சாலை வட்டம், புளு வாட்டர் எஸ்டேட் அருகில் ஒரு புதரில் ஓர் இந்தியப் பெண், கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணக் கோலத்தில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் நான்காவது சந்தேகப் பேர்வழியைக் கைது செய்துள்ளனர்.

நான்காவது சந்தேகக் பேர்வழி 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஆவார். செராஸ், தாமான் காசல்பீல்ட் வீடமைப்புப் பகுதியில் ஒரு வீட்டில் கொலையுண்ட பெண்ணுடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த பெண், நான்காவது சந்தேகப் பேர்வழியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்தார்.

ஏற்கனவே, உயிரிழந்த பெண்ணின் முன்னாள் காதலன், அவரின் வளர்ப்புச் சகோதரன் மற்றும் மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வேலையற்றப் பெண்ணான அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை செர்டாங் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது கைது செய்யப்பட்டார். புலன் விசாணைக்கு உதவும் வகையில் மேலும் சிலர் கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News