கோலாலம்பூர், ஜூலை.31-
வரும் ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படவிருக்கும் தேசிய தினத்தை முன்னிட்டு 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள 100 ரிங்கிட் உதவித் தொகையைப் பெறுவதற்கு மக்கள், தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று அரசாங்கம் மீண்டும் நினைவுறுத்தியுள்ளது.
இந்த 100 ரிங்கிட் உதவித் தொகை, ஒவ்வொருவரின் மைகாட் அட்டையிலும் பட்டுவாடா செய்யப்படும். இந்தத் தொகையைப் பெறுவதற்கு சாரா திட்டத்தின் கீழ் தகுதி பெற்றவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டியதில்லை அல்லது எந்தவொரு விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
கிட்டத்தட்ட 22 மில்லியன் பேருக்குச் சென்றடையவிருக்கும் இந்த 100 ரிங்கிட்டை மைகாட் அட்டையில் சேர்ப்பதற்கான பிரத்தியேகமான தரவு உள்ளீட்டை, அந்த அடையாள அட்டையில் தேசிய பதிவு இலாகா ஏற்படுத்தியுள்ளது என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.








