Oct 9, 2026
Thisaigal NewsYouTube

எதிர்வாதம் புரிய ஆசிரியருக்கு உத்தரவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
எதிர்வாதம் புரிய ஆசிரியருக்கு உத்தரவு

சிரம்பான், ஜூன்.30-

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 13 வயது மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 47 வயது ஆசிரியர் ஒருவர், எதிர்வாதம் புரியும்படி சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

ஃபாரிட் அஸார் நவி என்ற அந்த ஆசிரியருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டக் குற்றச்சாட்டில் அடிப்படை முகாந்திரங்கள் இருப்பதை பிராசிகியூஷன் தரப்பு நிரூபித்துள்ளது என்று நீதிபதி சுரித்தா பூடின் உத்தரவிட்டார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு செனவாங்கில் உள்ள ஒரு பள்ளியின் வளாகத்தில் அந்த ஆசிரியர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த ஆசிரியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →