Jul 31, 2026
Thisaigal NewsYouTube
7.8 மில்லியன் விற்பனையில் 2023 ஆம் ஆண்டு UDA கார்னிவல்
தற்போதைய செய்திகள்

7.8 மில்லியன் விற்பனையில் 2023 ஆம் ஆண்டு UDA கார்னிவல்

Share:

மூன்று மாநிலங்களில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டின் UDA Carnival - வில் தொழில்முனைவோருக்கான மொத்த விற்பனையில் 7.8 மில்லியன் வெள்ளியை UDA Holdings Berhad பதிவு செய்துள்ளது.

ஜொகூர் பாரு, பினாங்கு, சபா ஆகிய மாநிலங்களில் நடந்தேறிய இந்நிகழ்வில் ஏறத்தாழ 400 தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டதாக UDA Holdings Bhd-யின் தலைவர் டத்தோ முஹமாட் சலிம் கைலினி தெரிவித்தார்.

இந்த UDA Carnival இரண்டு நிகழ்வினை சார்ந்தவையாகும். ஒன்று, UDA Ria நிகழ்வு அதாவது நாடு முழுவதும் இருக்கின்ற நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் தயாரிப்புகளை ஊக்குவிக்கும். மற்றொன்று, USHANiaga நிகழ்வு என்பது தொழில்முனைவோர் திட்டமாகும் என்று முஹமாட் சலிம் விளக்கினார்.

மூன்று இடங்களில் நடத்தப்பட்ட இந்நிகழ்வு கடந்த ஆண்டினை ஒப்பீடுகையில் சிறப்பாக நடைபெற்றதாகவும் அதீத லாபத்தை திரட்ட முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Related News