Aug 6, 2026
Thisaigal NewsYouTube
கார் மோதப்பட்டு தந்தையும், மகனும் மரணம்
தற்போதைய செய்திகள்

கார் மோதப்பட்டு தந்தையும், மகனும் மரணம்

Share:

கூலிம், டிச. 27-

ஓர் இந்திய நபரும், அவரின் மகனும் சென்ற மோட்டார் சைக்கிளை கார் ஒன்று மோதி, விபத்துக்குள்ளானதில் தந்தையும், மகனும் மாண்டனர்.

இச்சம்பவம் நேற்று மாலை 5.07 மணியளவில் கெடா, கூலிம், ஜாலான் கெனாரி, தாமான் கெனாரி சாலையில் நிகழ்ந்தது.

36 வயது வினோத் அரசு மற்றும் அவரின் 8 வயது மகன் நவினேஸ் வினோத் ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டதாக போலீசார் அடையாளம் கூறினர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்ததாக நம்ப்படும் வோல்ஸ்வேகன் கார் ஒன்று, தனது வழித்தடத்திலிருந்து விலகி எதிர்திசையில் நுழைந்ததில் எதிரே வந்து கொண்டிருந்த தந்தையும் மகனும் பயணித்த மோட்டார் சைக்கிளை மோதியதாக கூறப்படுகிறது.

இதில் கூலிம் தமிழ்ப்பள்ளியின் இரண்டாம் ஆண்டு மாணவரான நவினேஸ், கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டார்.

அவரின் தந்தை வினோத், தலையில் பலத்த காயங்களுக்கு ஆளாகி, கூலிம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்ததாக கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட். ஹாஜி சுல்கிப்லி அஸிஸான் தெரிவித்தார்.

தந்தையையும், மகனையும் மோதித்தள்ளிய வோல்ஸ்வேகன் காரை செலுத்தியவர் 32 வயது பெண் என்று அடையாளம் கூறப்பட்டுள்ளது. அவர் எவ்வித காயங்களுக்கும் ஆளாகவில்லை.

உயிரிழந்த வினோத், கூலிமில் தொழிற்சாலை ஒன்றில் வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

 ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு