Aug 12, 2026
Thisaigal NewsYouTube
லோரியினால் மோதப்பட்ட ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

லோரியினால் மோதப்பட்ட ஆடவர் பலி

Share:

சுங்கை பூலோ, மே.30-

லோரியினால் மோதப்பட்ட ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.40 மணியளவில் பண்டார் பாரு சுங்கை பூலோ பள்ளிவாசல் அருகில் நிகழ்ந்தது.

அந்த லோரி, மோட்டார் சைக்கிளை மோதிய பின்னர் கடை ஒன்றின் இரும்பு வேலியில் மோதியது. இதில் 30 வயது மதிக்கத்தக்க மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கினார்.

சுயநினைவின்றி கிடந்த அந்த நபர், மீட்கப்பட்டு, மருத்துவ அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப் படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் தெரிவித்தார்.

Related News