இவ்வாண்டுக்கான எஸ்பிஎம் சோதனையில் அமரவிருக்கும் மாணவர்கள், தற்போது பெய்து வரும் அடை மழையினால் ஏற்படக்கூடிய வெள்ளம் குறித்து அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்துள்ளார்.
வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயகர பகுதிகளை கல்வி அமைச்சு அடையாளம் கண்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மாணவர்கள், எஸ்.பி.எம். தேர்வை எவ்வித தடங்கலின்றி எழுதுவதற்கு அவர்கள் முன்கூட்டியே பாதுகாப்பாக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை கல்வி அமைச்சு செய்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எஸ்பிஎம் தேர்வு எழுதும் அமலாக்கத்தில் வடகிழக்கு பருவமழையும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். வரும் டிசம்பர் 5 ஆம் தேதி தொடங்கவிருக்கும் எஸ்.பி.எம். தேர்வுக்காக நாடு முழுவதும் 5,063 மையங்கள் தயார்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதகாவும் அவர் சுட்டிக்காட்டினார்.








