அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் 6 மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சுமார் 40 ஆயிரம் போலீஸ்காரர்கள் பணியில் அமர்த்தப்படுவர் என்று அரச மலேசிய போலீஸ் படைத் தலைவர் தான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசெயின் தெரிவித்துள்ளார். 6 மாநிலங்களில் சிலாங்கூர் மாநிலமே பெரும் பரபரப்புக்குரியதாக கருதப்படுகிறது. அம்மாநிலத்தில் 56 தொகுதிகளிலும் பரபரப்பும், பதற்றமும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் சீராகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்கு போதுமான போலீஸ்காரர்களின் எண்ணிக்கையும், பலமும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளையில் அரசியல்வாதிகள் சர்ச்சைக்குரிய விவகாரங்களைக் கையில் எடுக்க வேண்டாம் என்பதையே தாம் மீண்டும் வலியுறுத்த விரும்புவதாக ரஸாருடின் ஹுசெயின் குறிப்பிட்டார்.
அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் சமூக வலைத்தளப்பதிவுகள், உரைகள் என அவர்கள் சம்பந்தப்படக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் போலீசார் அணுக்கமாக கண்காணித்து வருவதாக ரஸாருடின் ஹுசெயின் விளக்கினார்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி


