சிலாங்கூர் மாநில அரசின் தீபாவளி பொது உபசரிப்பு வரும் நவம்பர் 4 ஆம் தேதி சனிக்கிழமை கிள்ளான், செட்டி பாடாங்கில் நடைபெறும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாநாயுடு தெரிவித்துள்ளார்.
இரவு 7.00 மணிக்கு தொடங்கி, 11 மணி வரை நடைபெறவிருக்கும் இந்த தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்விற்கு சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிறப்பு வருகை புரிவார் என்று பாப்பாராயுடு குறிப்பிட்டார்.
தவிர இந்த பொது உபசரிப்பில் சிலாங்கூர் அரசின் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பிப்பர். இதில் மாநிலத்தை சேர்ந்த அனைத்து மக்களும் கலந்து கொள்ளும்படி பாப்பாராயுடு அழைப்பு விடுத்துள்ளார்.








