Jul 16, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டவர் கடைகள், விசா முறைகேடு: குடிநுழைவுத்துறை அதிரடி சோதனையில் 13 பேர் கைது
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டவர் கடைகள், விசா முறைகேடு: குடிநுழைவுத்துறை அதிரடி சோதனையில் 13 பேர் கைது

Share:

சிலாங்கூர், சிப்பாங் பகுதியில் வெளிநாட்டவர்கள் நடத்தும் கடைகள் மற்றும் விசா முறைகேடுகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் 13 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் மலேசிய குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா பின் ஷாபான் தெரிவித்துள்ளார்.

மளிகை மற்றும் மினி சந்தை வளாகங்களில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், சமூகப் பயண விசாவைத் தவறாகப் பயன்படுத்தி வேலை செய்த 10 இந்தோனேசியர்களும், 3 வங்காளதேச நாட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.

மலேசியர்களின் வணிக உரிமங்களைப் பயன்படுத்தி, முற்றிலும் வெளிநாட்டவர்களால் இயக்கப்படும் இத்தகைய வணிகங்கள் மற்றும் குடிநுழைவுச் சட்டங்களை மீறுபவர்கள் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் எச்சரித்துள்ளார்.

Related News