தமது தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் கொள்கை நிபந்தனைகளை பாஸ் கட்சி ஏற்றுக்கொள்ளுமானால் அந்த மதவாத கட்சி அரசாங்கத்தில் ஓர் அங்கமாக இணைவதற்கான சாத்தியத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுக்கவில்லை.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாமன்னரின் ஆலோசனைக்கு ஏற்ப ஒற்றுமை அரசாங்கம் அமைவதற்கு பாஸ் கட்சிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அந்த கட்சி நிராகரித்து விட்டதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
ஒற்றுமை அரசாங்கம் என்று வரும் போது தாங்கள் முன்வைத்துள்ள கொள்கை நிபந்தனைகளை பாஸ் கட்சி ஏற்றுக்கொள்ளுமானால் எதிர்காலத்தில் அக்கட்சி ஓர் அங்கமாக அரசாங்கத்தில் ஒத்துழைப்பு கொள்வதற்கு தடை ஏதும் இல்லை என்று பிரதமர் தெளிவுபடுத்தனார்.
நேற்று Time சஞ்சிகைக்கு பேட்டி அளித்த பிரதமர் அன்வார், தமது தலைமையிலான நிர்வாகத்தில் இணைவதற்கு பாஸ் கட்சிக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.








