Oct 18, 2026
Thisaigal NewsYouTube

பொதுப்பணி இலாகாவின் தொழில்நுட்பத்தை வழங்க அமைச்சர் முன்வந்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பொதுப்பணி இலாகாவின் தொழில்நுட்பத்தை வழங்க அமைச்சர் முன்வந்தார்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 30-

ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் இந்திய மாதுவை கண்டு பிடிப்பதில் தேவையான தொழில்நுட்பத்தை வழங்கும்படி JKR எனப்படும் பொதுப்பணி இலாகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்துள்ளார்.

அந்த இந்தியப் பிரஜையை கண்டு பிடிப்பது என்பது கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் அதிகார வரம்புக்கு உபட்டது என்ற போதிலும் தார்மீக அடிப்படையில் தேவையான தொழில்நுட்பத்தை வழங்கும்படி JKR- க்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற மீட்பு நடவடிக்கைக்கான சில தொழில்நுட்பங்களை பொதுப்பணி இலாகா கொண்டுள்ளது. இவை மீட்புப்பணியாளர்களுக்கு உதவும் என்று அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →