May 22, 2026
Thisaigal NewsYouTube
கோல குபு பாரு இடைத்தேர்தல் பலத்தப் பாதுகாப்புடன் நடத்தப்படும்! உள்துறை அமைச்சர் உத்தரவாதம்
தற்போதைய செய்திகள்

கோல குபு பாரு இடைத்தேர்தல் பலத்தப் பாதுகாப்புடன் நடத்தப்படும்! உள்துறை அமைச்சர் உத்தரவாதம்

Share:

கோல குபு பாரு, மே 09-

வருகின்ற சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கோல குபு பாரு இடைத்தேர்தல் சுமூகமான முறையில் நடைபெறும்.

அதனை உறுதிபடுத்த, அனைத்து நிலைகளிலான பாதுகாப்புகள் பலப்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுட்டியோன் இஸ்மாயில் உத்தரவாதம் அளித்தார்.

அவ்விவகாரம் தொடர்பில், தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதின் ஹுசைன்-னுடன் நேற்று மாலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நாளில் பாதுகாப்புகள் போதுமான அளவில் உள்ளதை உறுதிபடுத்த, அதிகமான போலீஸ் உறுப்பினர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். ஆயினும், அது தொடர்பான எண்ணிக்கையை பொதுவில் தெரிவிக்க முடியாது என்றாரவர்.

மேலும், இடைத்தேர்தலுக்கான பரப்புரை காலம் இரண்டாம் கட்டத்தை அடைந்துவிட்ட நிலையில், இதுவரையில் குறைந்த அளவிலேயே புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் சைபுதீன் நசுட்டியோன் குறிப்பிட்டார்.

Related News